ஐரோப்பா

மியன்மாரில் விபத்துக்குள்ளான படகு : 07 பேர் பலி!

மியன்மாரில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக மீட்புப் பணியாளர் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மியான்மரின் தெற்குப் பகுதியான தனிந்தரிக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் குறித்த படகு விபத்துக்குள்ளானது.

அதில்  70-75 பேர் பயணித்ததாகவும் அவர்களில்  30 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் பொதுவாக அதிகபட்சம் 30-40 பயணிகளை ஏற்றிச் செல்லும் படகில் மக்கள் மற்றும் பொருட்களால் நெரிசல் அதிகமாக இருந்ததாகவும், கடலில் வலுவான நீரோட்டங்கள் இருப்பதாகவும் கிராமவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்