இலங்கை

அகில இலங்கை ரீதியில் பளு தூக்கல் போட்டியில் சாதனை படைத்த மாணவிகளுக்கு கௌரவிப்பு

அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் சாதனை படைத்த மாணவிகளுக்கான
கௌரவிப்பு நிகழ்வு இன்றையதினம் (25.09.2023) வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் சமூகத்தினரால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த செப்டம்பர் 16,17,18 ஆகிய தினங்களில் பொலன்னறுவை ராஜகிரிய வித்தியாலயத்தில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் சாதனை படைத்த மாணவிகளையும் அவர்களின் பயிற்றுவிப்பாளர் ஞா.ஜுவன் அவர்களையும் இவர்களிற்கு பொறுப்பாசிரியர்களான திருமதி J.D ரெஜினோல்ட், திருமதி அகிலா, திருமதி நடோஜினி ஆகியோரையும் பாராட்டும் விதமாக இந் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வினை பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி மரிய டெய்சி செபமாலை ,பிரதி அதிபர் ஸ்ரீரங்கநாதன், ஆசிரியர் மற்றும் பாடசாலை சமூகத்தினர் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்