உலகம் செய்தி

ஈரான் மீது தாக்குதல் – அமெரிக்கா மீதான நம்பிக்கையை இழந்த சீனா

ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் அமெரிக்கா மீதான நம்பிக்கையைச் சிதைத்துவிட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

சர்வதேச பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் ஒரு நாடு என்ற முறையிலும் அமெரிக்காவின் நம்பகத்தன்மை சரிந்துள்ளதாகச் சீனாவின் ஐக்கிய நாட்டுத் தூதர் தெரிவித்தார்.

போர் விரிவடைவதைத் தடுக்க இஸ்ரேல் உடனடியாக சண்டைநிறுத்த முயற்சியை எடுக்கவேண்டும் என அவர் குறிப்பிடப்படுகின்றது.

மோதலை பெரிதுபடுத்தும் எந்தவொரு திடீர் வன்முறையிலும் இருதரப்பும் ஈடபட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்காவின் நடவடிக்கை அபாயகரமானது, பிர்ச்சினையைத் தூண்டிவிட்டிருக்கிறது என்று சீன அரசாங்க ஊடக ஆய்வறிக்கைகள் கூறின.

இந்நிலையில் ஈரானிலிருந்த பெரும்பாலான சீனர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், மீதமுள்ள சிலர் பாதுகாப்பான இடங்களில் உள்ளதாகவும், ஈரானில் உள்ள சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி