ஐரோப்பா

ஜெர்மனியின் இலக்குகள் மீது தாக்குதல் – ரஷ்யாவின் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெர்மனியின் உள்கட்டமைப்புகள் மற்றும் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அலுவலகம் ரஷ்ய தூதரை வரவழைத்து இந்த நேரடி அச்சுறுத்தல் குறித்து கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஜெர்மனி அளிக்கும் ஆதரவைச் சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெர்லினின் கூட்டாட்சி வெளியுறவு அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் பதில் தெளிவாக உள்ளது.  நாங்கள் அச்சுறுத்தப்பட மாட்டோம். ஜெர்மனியில் இதுபோன்ற அச்சுறுத்தல்களும் அனைத்து வகையான உளவு நடவடிக்கைகளும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.” எனத் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இது தொடர்பில் ரஷ்யா எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம், உக்ரேனிய பாதுகாப்பு நிறுவனங்களின் துணை நிறுவனங்கள் அல்லது முக்கிய உதிரிபாகங்களை வழங்கும் நிறுவனங்கள் என்று நம்பப்படும் 21 நிறுவனங்களை மொஸ்கோ அடையாளப்படுத்தியுள்ளது.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் குறைந்தது மூன்று ஜெர்மன் நிறுவனங்கள் அடங்குகின்றன. அந்த நிறுவனங்கள் இலக்கு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்