இலங்கை

பெண்களின் உள்ளாடைகளை அணிந்திருந்த இராணுவ சிப்பாய் கைது!

ஹொரண பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் பெண்களுக்கான உள்ளாடைகளை அணிந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிகவெரட்டிய பிரதேசத்தை சேர்ந்த நாற்பது வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

இராணுவ முகாமிற்கு அண்மித்த வீடொன்றில், குறித்த பெண்ணின் உள்ளாடைகள் தொடர்ச்சியாக காணாமல் போயிருந்தமை தொடர்பில் அவதானம் செலுத்திய வேளையில், குறித்த இராணுவ சிப்பாய் உள்ளாடைகளை திருடியது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நபரை துரத்த முயன்றதாகவும், அவர் கம்பி வழியாக பதுங்கி முகாமிற்கு தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் அவர் ஒருவழியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில். பெண்கள் அணியும் உள்ளாடைகளை அணிந்திருந்தது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்