ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் அகதிகள் தங்கியுள்ள ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குதல்

பிரித்தானியாவில் சில நாட்களுக்கு முன்பு 17 வயது இளைஞர் ஒருவர் மூன்று சிறுமிகளை கத்தியால் குத்தி கொன்றார்.

ரொதர்ஹாமில் உள்ள அகதிகள் குழுவொன்று தங்கியுள்ள ஹோட்டல் ஒன்றின் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பல பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், அந்நாட்டில் பொலிஸ் அதிகாரிகளுடனான மோதலில் சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, பிரித்தானியா முழுவதும் பரவி வரும் கலவரம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் அலுவலகத்தில் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி