இலங்கை

இலங்கை மக்களுக்கு காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு!

நாட்டு மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் ‘உறுமய’ தேசிய வேலைத்திட்டம் நாளை (05.02) முதல் ஆரம்பமாகவுள்ளதாக காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் திரு.ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ரங்கிரி தம்புலு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

சுமார் பன்னிரண்டாயிரம் காணி உறுதிப்பத்திரங்கள் நாளை வழங்கப்பட உள்ளதாகவும், எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்