ஐரோப்பா

பிரான்ஸில் நகைக்கடையை திறந்த ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிரான்ஸில் நகைக்கடை ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த 80,000 யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

Chambourcy (Yvelines) நகரில் உள்ள Cleor எனும் புகழ்பெற்ற நகைக்கடையிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரவு கடையினை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைகளை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காலை 8 மணி அளவில் கடையின் ஊழியர்கள் கடையினை திறப்பதற்காக வருகை தந்த போது கடை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர்.

அவர்களே பொலிஸாரை அழைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

கொள்ளையிடப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 80,000 யூரோக்கள் என முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்