ஐரோப்பா

பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளை அதிர வைத்த கொள்ளையன் – பாரிஸில் சுற்றிவளைப்பு

பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளில் கடந்த பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Diego MS எனும் கொள்ளையன் ஒருவரே இவ்வாறு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலம்பிய நாட்டு குடியுரிமை கொண்ட குறித்த 33 வயதுடைய கொள்ளையன், ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபல ஆடம்பர விடுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தார்.

கொலம்பியா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் தேடப்பட்டு வந்த அவர், சென்ற மே மாதம் பாரிஸ் 9 ஆம் வட்டாரத்தில் உள்ள ஒரு விடுதியில் சுற்றுலாப்பயணி ஒருவரின் மடிக்கணனி, விலையுயர்ந்த கமரா போன்றவற்றை திருடியிருந்தார்.

2017 ஆம் ஆண்டில் இருந்து இதுபோன்ற கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த குறித்த நபர், இறுதியாக பரிசில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்