ஐரோப்பா

ஜேர்மனியிலும் பரவி வரும் கொரோனாவின் புதிய மாறுபாடு…

பல நாடுகளில் பரவி வரும் பிரோலா என்னும் புதிய கொரோனா மாறுபாடு, ஜேர்மனியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் பல்வேறு மாறுபாடுகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் மாறுபாடு உலகில் பரவத் துவங்கியுள்ளது. அந்த புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு, BA.2.86 அல்லது ‘Pirola’ என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் எந்த அளவுக்கு மோசமானது என்பது தெரியவில்லை. பிரச்சினை என்னவென்றால், இந்த பிரோலா வைரஸ் தனது புரத அமைப்பில் 30க்கும் மேற்பட்ட மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.

ஆகவே, அது மிக வேகமாக பரவக்கூடும் என்பதுடன், அது ஏற்கனவே கொடுக்கப்பட்ட தடுப்பூசியின் தாக்கத்தைத் தாண்டி தொற்றை ஏற்படுத்திவிடக்கூடும் என்னும் விடயம் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

ஜேர்மனியில், கடந்த வாரத்துக்கு முந்தைய வாரம் இந்த புதிய கொரோனா மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்