இலங்கை

வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பு – கொழும்பில் சிக்கிய இளைஞன்

கொழும்பில் சுமார் 06 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய நபரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாளிகாவத்தை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த போதைப்பொருளை கிராண்ட்பாஸ் பகுதிக்கு கொண்டு செல்லும் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

சந்தேகநபரிடம் இருந்து ஒரு கிலோ 105 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 750,000 ரூபாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்பதுடன், தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள கெசல்வத்த தினுக என்ற குற்றக் கும்பல் தலைவரின் உதவியாளர் எனத் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டுக் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் இருந்து கிடைத்த அறிவுறுத்தலின் அடிப்படையில் சந்தேக நபர் போதைப் பொருள்களை அந்தந்தப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனையாளர்களிடம் கொடுத்து பணப் பரிமாற்றம் செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று மாளிகாகந்த இலக்கம் 2 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்