இலங்கை

யாழில் தாயும் – மகனும் செய்த மோசமான செயல்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கச்சாய் தெற்கு பகுதியில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

80 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடனே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் வீதித் தடைகளை ஏற்படுத்தி கார் ஒன்றை சோதனையிட்ட போது 500 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் இருந்து 87 கிலோ 616 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், சந்தேகநபரான பெண் தனது மகனுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதும், அதற்காகவே கஞ்சா கையிருப்பை வீட்டில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்