பணய கைதிகள் மீட்பின்போது ரபா நகரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 50 பாலஸ்தீனர்கள் பலி
ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரானது நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. காசாவில் உள்ள 23 லட்சம் பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்பால் எகிப்து எல்லையையொட்டிய பகுதிக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.
இந்நிலையில் பணயகைதிகளை மீட்கும் நடவடிக்கையாக ரபா நகரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 50 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக தெற்கு காசா நகரமான ரபாவில் உள்ள மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில் 2 பணயக்கைதிகளை மீட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.





