வாழ்நாள் முழுவதும் குழந்தையாகவே வாழ ஆசைப்படும் வினோத பெண்!
தனது வாழ்க்கையை குழந்தையைபோல் வாழ்ந்து வரும் பெண் ஒருவர் ஒவ்வொரு மாதமும் நாப்கின்களுக்காக £230 செலவிடுவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பைஜி மில்லர், என்ற பெண், தொட்டிலில் தூங்கி, டயபர் மாற்றியும், பொம்மைகளுடன் விளையாடியும் தனது நாட்களை கழித்து வருகிறார்.
2018 இல் இவ்வாறான ஒருவாழ்க்கையை முறையை ஏற்றுக்கொண்ட பைஜிக்கு, அவருடைய போஃலோவர்ஸ் நிதிவுதவி செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், நான் எப்பொழுதும் பொம்மைகளை சேகரித்து வருகிறேன், மேலும் இளம் நகைச்சுவை உணர்வைக் கொண்டிருந்தேன்.
அதனால் எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் ஏற்றுக்கொண்டனர். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இவ்வாறான ஒருவாழ்க்கையை வேறு யாரேனும் வாழ்கிறார்களா என்பதை நான் இணையத்தில் தேட ஆரம்பித்தேன். அவ்வாறு யாரும் இல்லை. ஆகவே நான் பொதுவெளியில் தோன்ற முடிந்தது.
நெகடிவ் கமெண்டுகள் குறித்து நான் கருத்து தெரிவிப்பதில்லை. நான் என் வாழ்க்கை முறையை வேறு யாரிடமும் திணிப்பதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.