இலங்கை

யாழ். உடுப்பிட்டி பகுதியில் இயங்கி வரும் சட்டவிரோத மதுபான சாலை ;MP அங்கஜன் ராமநாதன் கோரிக்கை

உடுப்பிட்டி பகுதியில் வீடொன்றில் சட்டவிரோத மதுபான சாலை இயங்கி வருவதாகவும் குறித்த சட்டவிரோதமான மதுபானசாலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (26) நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்து அங்கஜன் இராமநாதன், உடுப்பிட்டி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள ஒரு வீடொன்றில் சட்டவிரோதமான மதுபானசாலை இயங்கி வருகின்றது.

அதாவது மதுபானசாலைக்கு செல்வோர் ‘பெல்’ அடித்து உள்ளே சென்று மதுபானத்தை கொள்வனவு செய்ய முடியும். எனவே, அதனை தடுத்துநிறுத்துமாறு கோரினார்.இதன்போது குறித்த பிரிவுக்கான பொலிஸ் பொறுப்பாதிகாரியினை உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு குழுத்தலைவரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!