கிங் ஆஃப் கோதா வெளியாவதற்கு முன்பே பல கோடி ரூபாய்க்கு விற்பனை
துல்கர் சல்மான் நடிக்கும் கிங் ஆஃப் கோதா படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் பல கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், சம்மி திலகன், ஷாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கிங் ஆஃப் கோதா படத்தில் ரக்கட் பாயாக கேங்க் ஸ்டராக சும்மா கெத்தாக மிரட்டி இருக்கிறார் துல்கர். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியிருக்கும் இப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இப்படம் 2023 ஓணம் பண்டிகை அன்று உலகமெங்கும் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க தமிழகத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் படமாக்கப்பட்டது.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் Wayfarer Films இணைந்து வழங்கும் இத்திரைப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை பிரபல OTT நிறுவனம் ரூ.55 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே கிங் ஆஃப் கோதா படம் பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. மேலும் துல்கன் சல்மானை ரக்கட் பாயாக திரையில் பார்க்க டீன் ஏஜ் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Thank you everyone for the love !! 9M in 24 hours !!!@AishuL_ @actorshabeer @Prasanna_actor #AbhilashJoshiy @NimishRavi @JxBe @shaanrahman @ActorGokul @ActorSarann @TheVinothCj @ZeeStudios_ @DQsWayfarerFilm @SonyMusicSouth @sonymusicindia#KingOfKotha #KingOfKothaTeaser #KOK… pic.twitter.com/R2JPLHArI6
— Dulquer Salmaan (@dulQuer) June 29, 2023