ஐரோப்பா

கிரேட்  மென்செஸ்டரில் புதிய மேயரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் – வாக்குப்பதிவுகள் ஆரம்பம்

கிரேட்  மென்செஸ்டரில் (Greater Manchester) புதிய மேயரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று  இடம்பெற்று வருகிறது.

ஆண்டி  பர்னம் தனது மேயர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்தபகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய இடைத்தேர்தலாக  விவரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தலில் 02 மில்லியன் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இரவு 10 மணிவரை வாக்குபதிவு இடம்பெறவுள்ளது.

மென்செஸ்டர் நகர மன்றத்தின் தலைவரான, தொழிலாளர் கட்சியின் பெவ் கிரேக் (Bev Craig), பிரதமரின் விருப்பமான வேட்பாளராக உள்ளார்.  அவரை எதிர்த்து 06 பேர் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வருமாறு,

பெவ் கிரேக் (தொழிலாளர் கட்சி),

பில் எக்கர்ஸ்லி (கன்சர்வேடிவ் கட்சி),

ஜெரால்டின் காஜின்ஸ் (பசுமைக் கட்சி),

சியான் ஆஸ்ட்லி (ரிஃபார்ம் யுகே),

ரிச்சர்ட் கில்பாட்ரிக் (லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி),

மார்லன் வெஸ்ட் (ரெஸ்டோர் பிரிட்டன் கட்சி),

மார்கஸ் ஃபார்மர் (சுயேச்சை).

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்