இலங்கை செய்தி

இந்திய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கொழும்பில் ஆராய்வு

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து இலங்கையும் இந்தியாவும் கலந்துரையாடியுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து இலங்கையும் இந்தியாவும் கலந்துரையாடியுள்ளன.

தொழில்அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்களில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் அவற்றைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தேவையான உடன்பாடுகளைப் புதுப்பிப்பது குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தத் திட்டங்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி; துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து,தோட்டப்பயிர்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு வீட்டுவசதி கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல், மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம், மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு உள்ளிட்ட பல்வேறு அமைச்சுக்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

பேரிடர் மீட்பு மற்றும் புனரமைப்புக்காக இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மற்றும் மானிய உதவியின் மூலம் நிதியளிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய நிதியுதவித் திட்டங்களின் முன்னேற்றத்தை மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் ஒரு தனிப் பிரிவை நிறுவுவது குறித்தும் அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளனர்.

ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சு மற்றும் பிற தொடர்புடைய அமைச்சுக்களின் மூத்த அதிகாரிகளும், இந்திய தூதரகப் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை