உலகம் செய்தி

ஈரானில் பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதி:இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஈரானில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய ஐஎஸ்ஐஎல் (ISIL) அமைப்பைச் சேர்ந்த இருவருக்கு இன்று மரண தணடனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய ஐஎஸ்ஐஎல் (ISIL) அமைப்பைச் சேர்ந்த இருவருக்கு இன்று மரண தணடனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎல் (ISIL) பயங்கரவாத அமைப்பு வீழ்ச்சியடைந்த பிறகு, ஈரானுக்குள் மீண்டும் தங்களது வலையமைப்பைக் கட்டமைத்து, தாக்குதல்களை நடத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர்களாக மொஹியதின் அப்துல்லாஹி மற்றும் ஹொசைன் பலானி ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர்.

ஈரான்-ஈராக் எல்லையில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாமு (Bamu) மலைப்பகுதியில் தங்களது தளத்தை அமைத்திருந்த இந்தக் குழுவினர், அங்கு புதிய போராளிகளைச் சேர்த்தல், ஆயுதங்களைக் குவித்து வைத்தல் மற்றும் எல்லை தாண்டிய ஊடுருவல் தாக்குதல்களுக்குத் திட்டமிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையினர் இந்த பயங்கரவாதக் குழுவைக் கண்காணித்து வந்த நிலையில், அவர்கள் எந்தவொரு தாக்குதலையும் நடத்துவதற்கு முன்பாகவே, அந்தப் பகுதி ஈரான் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளால் முற்றுகையிடப்பட்டது.

இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு மோதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்; ஈரானிய புரட்சிகர காவல்படையைச் (IRGC) சேர்ந்த மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இப்போராட்டத்தின் போது எஞ்சியிருந்த குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து பெருமளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள், உபகரணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.

நீதிமன்ற விசாரணைகளின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்டறிந்த பின்னர், ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக இருவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்த உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து, அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் முடிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை இருவருக்குமான மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி