UKவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தலைப்பில் விவாதம் – அணிதிரண்ட மக்கள்
பிரித்தானியாவில் தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் (Tommy Robinson) கலந்துகொண்ட ஆக்ஸ்போர்டு யூனியன் நிகழ்வை எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
‘இஸ்லாத்தின் மீது சந்தேகம் கொள்வது மேற்கத்திய நாடுகளுக்குச் சரிதான்’ என்ற தலைப்பில் விவாதம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் பரவலான விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்தே நூற்றுக்கணக்கானோர் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த விவாதத்தில், ராபின்சனும், முன்னாள் நடிகர் லாரன்ஸ் ஃபாக்ஸும் பங்கேற்க இருந்தனர்.
சர்ச்சைக்குரிய நிகழ்வு நடைபெறும் இடமான செயின்ட் மைக்கேல் தெருவின் இருபுறமும் போராட்டக்காரர்கள் ஒன்றுக்கூடியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “வெட்கம், வெட்கம்” எனக் கூச்சலிட்டமையும் குறிப்பிடத்தக்கது.





