ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர்களை ஆபத்தான நாடுகளுக்கு கடத்திய ட்ரம்ப் நிர்வாகம்!
ட்ரம்ப் நிர்வாகம் ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர்களை மத்திய ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க பிரஜைகள் அந்நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே வழக்கறிஞர்கள் ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை மரண தண்டனை என விவரித்துள்ளனர்.
உள்நாட்டுப் போர், ரஷ்ய துணை ராணுவப் படைகளின் இருப்பு, மற்றும் நாடு கடத்தப்பட்டவர்களுக்கு மொழித் திறனோ அல்லது தொடர்புகளோ இல்லாதது உள்ளிட்ட மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அபாயங்களை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேற்படி நாடு கடத்தலுக்காக ட்ரம்ப் நிர்வாகம் சுமார் 20 நாடுகளுடன் இரகசிய ஒப்பந்தங்களை முன்னெடுத்திருந்ததாக கூறப்படுகிறது.
அதேநேரம் அமெரிக்கா இந்த நாடுகளுக்கு மில்லியன் கணக்கில் பணம் தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




