மீண்டும் மோதிக் கொள்ளும் ஆப்கான் – பாகிஸ்தான் : 11 பேர் மரணம்!
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 11 குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் தரப்பிலிருந்து உடனடியாக எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.
ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹசன் கெல் பகுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்த தலிபான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் பாதுகாப்பு சோதனை சாவடியை தாக்கியதை தொடர்ந்து மேற்படி வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.




