தைவானின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய தீவுகளில் சீனா அத்துமீறல்!
தென் சீனக் கடலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளைச் சுற்றியுள்ள கடற்பரப்பில், சீனாவின் கடலோர காவல் கப்பல் ஒன்றும், ஆய்வு கப்பல் ஒன்றும் இன்று ரோந்து சென்றதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது.
தைவானின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதாஸ் தீவுகளில் சீனா தொடர்ந்து அத்துமீறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தெற்கு தைவானுக்கும் ஹாங்காங்கிற்கும் இடையில் உள்ள இந்தத் தீவுகள், தைவான் தீவிலிருந்து 400 கி.மீற்றருக்கும் (250 மைல்கள்) அதிகமான தூரத்தில் இருப்பதால், சீனத் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகக்கூடியவை என சில பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.
“தைவானைத் தூண்டும் வகையில் சீனக் கடலோரக் காவல்படை மற்றும் ஆய்வுக் கப்பல்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டது இதுவே முதல் முறை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




