நெதர்லாந்தில் போதைமருந்து கொடுக்கப்பட்டு பல பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்!
நெதர்லாந்தில் போதைமருந்து கொடுக்கப்பட்டு பல பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பூதாகாரமாக வெடித்துள்ள நிலையில், 04 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் வீடுகளில் இருந்து கணினிகள், தொலைபேசிகள் மற்றும் தரவு சேமிப்பு சாதனங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் இந்த வழக்கில் இன்னும் நிறையபேர் கைது செய்யப்படலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நெதர்லாந்தில் உள்ள பல பெண்களுக்கு, அவர்களின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள ஒருவரால் போதை மருந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
டச்சு தனியுரிமை விதிகளுக்கு இணங்க சந்தேகநபர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.
மேற்படி சந்தேகநபர்களால் எத்தனைப் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிய விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





