முதியோர் இல்ல தீவிபத்து – மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஹொரணை முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் ஆறு பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இன்றைய தினம் தீவிபத்து தொடர்பான நீதான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இச்சம்பவம் நடந்த நேரத்தில் முதியோர் இல்லத்தில் 71 பேர் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் 50 இற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்கள் அனைவரும் இராணுவத்தினரின் உதவியுடன் மற்றுமொரு முதியோர் இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





