பிரித்தானியாவை உலுக்கிய வெப்ப அலை : 15 பேர் பலி!
சமீபத்திய வெப்ப அலையின் காரணமாக பிரித்தானியா முழுவதும் ஏறக்குறைய 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மரணங்கள் நீர் நிலைகளில் சம்பவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரோயல் லைஃப் சேவிங் சொசைட்டி (Royal Life Saving Society), , தண்ணீரில் இறங்குவதற்கு முன்பு சிந்திக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில் இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் குளிர் நீர் அதிர்ச்சி குறித்து எச்சரித்துள்ளது.





