இலங்கை

எரிபொருளுக்கான விலை உயர்வு!!

எரிபொருளுக்கான விலையை உயர்த்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விலை உயர்வானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.

அதன்படி, ஒரு லிட்டர் லங்கா வொயிட் டீசலின் விலை  15 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை  407 ரூபாயாகும்.

அதேபோல்   சூப்பர் டீசல் லீட்டர் ஒன்றின்  விலை  20 ரூபாயால் உயர்த்தப்பட்டு 478  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு லிட்டர் ஆக்டேன் 95 பெட்ரோலின் விலை 25 உயர்த்தப்பட்டுள்ளது, அதன் புதிய விலை 495  ரூபாயாகும்.

ஒரு லிட்டர் ஆக்டேன் 92 பெட்ரோலின் விலை  24 உயர்த்தப்பட்டு 434  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை லங்கா மண்ணெண்ணெயின் விலையை 20 ரூபாயால் உயர்த்தப்பட்டு 285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!