பந்தர் அப்பாஸ் துறைமுகம் மீதான தாக்குதல் எதிரொலி – எண்ணெய் விலை உயர்வு!
ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன.
அதன்படி, கச்சா எண்ணெய் விலை மீண்டும் 3 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 3.75 சதவீதம் அதிகரித்து, 97.8 டொலராக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராகி வந்த வேளையில், இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் ஒரு மோதல் சூழல் உருவாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி





