பங்களாதேஷில் கோர விபத்து – 15 பேர் ஸ்தலத்தில் பலி!
பங்களாதேஷில் இன்று அதிகாலை லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் டாக்காவிலிருந்து 83 கி.மீ தொலைவில் உள்ள டாங்கைல் மாவட்டத்தின் சோரடோயில் (Soratoil) பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.





