உக்ரைனால் வந்த வினை – லாட்வியப் பிரதமர் எவிகா சிலினா பதவி விலகினார்!
லாட்வியப் பிரதமர் எவிகா சிலினா (Evika Silina) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ரஷ்யாவை நோக்கிச் சென்ற உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் லாட்விய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரிஸ் ஸ்ப்ரூட்ஸை ( Andris Spruds) சிலினா பதவிநீக்கம் செய்திருந்தார்.
சிலினாவின் இந்த நடவடிக்கைக்கு ஸ்ப்ரூட்ஸின் முற்போக்குக் கட்சி அதிருப்தி தெரிவித்ததோடு, ஆளும் கட்சிக்கு அளித்துவந்த ஆதரவையும் திரும்பப் பெற்றது.
இதனால் பொதுத் தேர்தலுக்கு முன்பே அந்த கூட்டணி சரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கபது.





