ஒருபக்கம் போர் : மறுபக்கம் UAEயின் அதிபரை இரகசியமாக சந்தித்த நெதன்யாகு!
ஈரானுடனான போரின் போது, தான் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு “இரகசியமாகப் பயணம் செய்து” அதன் அதிபரைச் சந்தித்ததாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியப் பிரதமருக்கும் அதிபர் ஷேக் முகமது பின் சயீதுக்கும் ( Sheikh Mohammed bin Zayed) இடையிலான சந்திப்பு ஒரு “வரலாற்றுத் திருப்புமுனைக்கு” வழிவகுத்தது என்று நெதன்யாகுவின் அலுவலகம் கூறியது.
இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம், அந்தப் பயணம் குறித்த கூற்றுகள் “முற்றிலும் ஆதாரமற்றவை” என்று மறுத்ததுள்ளது.
இந்த மோதலின் போது ஈரான் அமீரகத்தில் உள்ள பல இலக்குகளைத் தாக்கியது. மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் அந்நாடு கொண்டுள்ள நெருங்கிய உறவுகளுக்காக தெஹ்ரான் அந்நாட்டை மீண்டும் மீண்டும் விமர்சித்துள்ளமை குறிப்படத்தக்கது.





