01 பில்லியன் கச்சா எண்ணெய் இழப்பு : நிலமை சரியானாலும் மீண்டு வர நீண்டகாலம் வேண்டும்!
கடந்த இரண்டு மாதங்களில் சர்வதேச சந்தைகளில் சுமார் 01 பில்லியன் கச்சா எண்ணெயை இழந்துள்ளதாக சவுதி அரம்கோ தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தடைபட்டதால் எரிசக்தி சந்தை கடுமையான நெருக்கடியில் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்பில் இன்று சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், எண்ணெய் விநியோக வழிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட சந்தை இயல்பு நிலைக்குத் திரும்ப கணிசமான காலம் ஆகும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க-இஸ்ரேல் போரினால் ஏற்பட்ட அமைதியின்மைக்கு மத்தியில், ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் முற்றுகையிட்டதால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, உலகச் சந்தையில் எண்ணெய் விலைகளும் வேகமாக உயர்ந்துள்ளன என்றும் அவர் சுட்காட்டினார்.
இதேவேளை அரம்கோ தனது ‘கிழக்கு-மேற்கு குழாய்வழியை’ பயன்படுத்தி, ஹோர்முஸ் ஜலசந்தியைத் தவிர்த்து, செங்கடல் வழியாக கச்சா எண்ணெயைக் கொண்டு செல்வதாகவும், இந்த உலகளாவிய விநியோக நெருக்கடியைத் தணிப்பதில் முக்கிய பங்குவகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




