ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடி- பயணிகளை ஒரே விமானத்தில் இணைக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி

இந்த கோடை காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதால், ஒரே இடத்திற்குச் செல்லும் பல விமான சேவைகளில் உள்ள பயணிகளை ஒன்றாக இணைத்து குறைவான விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு பிரித்தானிய அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.

ஒரே நாளில் ஒரே இலக்கை நோக்கி செல்லும் பல சேவைகள் உள்ள வழித்தடங்களில்,பயணிகளின்றி செல்லும் விமானங்களை குறைத்து

எரிபொருள் சேமிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கமைய சில பயணிகள் தங்களின் முன்பதிவு செய்யப்பட்ட விமானத்திலிருந்து அதே இலக்கை நோக்கிய மற்றொரு விமானத்திற்கு மாற்றப்படலாம்.

ஆனால், எதிர்க்கட்சிகள் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

பயணிகளை விமான நிறுவனம் விரும்பும் நேரத்தில், வேறு விமானத்திற்கு மாற்றும் நிலை உருவாகலாம் என கன்சர்வேடிவ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

பயண அட்டவணைகளை முன்கூட்டியே உறுதி செய்து, கோடைக்கால சிரமங்களை தவிர்க்க இந்த திட்டம் உதவும் என அரசு தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!