பேருந்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா : இருவர் பலி!
உக்ரைனின் தெற்கு நகரமான கெர்சனில் பேருந்தொன்றின் மீது ரஷ்யா இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஏழு பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுப் பயன்பாட்டுத் துறை ஊழியர்கள் என்று பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ப்ரோகுடின் (Oleksandr Prokudin) குறிப்பிட்டுள்ளார்.
உடைந்த ஜன்னல்களுடன் பேருந்தையும், அதன் தரையில் இரத்தக் கறைகளுடன் கிடந்த ஒரு உடலையும் காட்டும் படங்களை அவர் டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை “இத்தகைய தாக்குதல்கள், பொதுமக்களுக்கு எதிரான ஒரு திட்டமிட்ட பயங்கரவாதக் கொள்கையின் ஒரு பகுதியாகும்,” என்று உக்ரைனின் மனித உரிமைகள் குறைதீர்ப்பாளர் டிமிட்ரோ லுபினெட்ஸ் ( Dmytro Lubinets) தெரிவித்துள்ளார்.





