ஜார்ஜியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ – திணறும் தீயணைப்பு படையினர்!
தென்கிழக்கு ஜார்ஜியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயினால் 87 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு பெரும் காட்டுத்தீ பரவி வருவதாகவும், அதில் 7 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மக்கள் மேற்படி காட்டுத்தீயில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 20 அன்று மின்கம்பிகள் மோதியதால் ஏற்பட்ட காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் தொடர்ந்து பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி நிலவரப்படி 31 சதுர மைல்களுக்கு மேல் பரவியுள்ளது.
மணிக்கு 15 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், “தீ விபத்துகள் கடுமையாக இருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வறட்சி, காற்று, காலநிலை மாற்றம் மற்றும் 2024-ல் ஹெலன் சூறாவளியால் மரங்கள் வீழ்ந்தது ஆகியவற்றால் நிலமை மோசமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





