இலங்கை செய்தி

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள் (Dansal) தொடர்பான பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்னதானங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள தரப்பினர், அது குறித்து அந்தந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கு அறியப்படுத்தி, பதிவுகளை மேற்கொள்ளுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி. பொரலெஸ்ஸ கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்போது, அன்னதானம் நடத்தப்படும் இடம் மற்றும் அது எவ்வகையான  என்பது குறித்த விபரங்களை உரிய அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.

இப்பதிவுகளைத் தொடர்ந்து, அன்னதானங்களை சுகாதாரமான முறையில் நடத்துவது தொடர்பான விழிப்புணர்வுத் திட்டமொன்றை அனைத்து ஏற்பாட்டாளர்களுக்கும் முன்னெடுக்க பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!