ஹோர்முஸ் ஜலசந்தியில் இரு கப்பல்களை கைப்பற்றிய ஈரான்!
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படை, ஹோர்முஸ் ஜலசந்தியில் இரண்டு கப்பல்களைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
எம்.எஸ்.சி ஃபிரான்செஸ்கா ( MSC Francesca) மற்றும் எபமினோண்டாஸ் (Epaminondas) என்ற இரு கப்பல்களும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இந்த இரண்டு கப்பல்கள் மீது முன்னதாகவும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் தற்போது கப்பல்கள் ஈரானின் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் குறித்த கப்பல்கள் எவ்வாறு கைப்பற்றப்பட்டன என்பது குறித்த மேலதிக விவரங்கள் தெரியவரவில்லை.





