பிரித்தானியாவின் பாதுகாப்பு விவரங்கள் கசிவு : முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது!
பிரித்தானியாவின் பாதுகாப்பு தொடர்பான விவரங்களை நாடாளுமன்ற ஊழியர் ஒருவர் கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கணினியை தவறாக பயன்படுத்துதல் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 1990 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று அவை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்திய சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல், இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.
அத்துடன் காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவையில் மேலதிக விவரங்கள் குறித்து விவாதிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





