உலகம்

கரீபியன் கடற்பகுதியில் படகு மீது தாக்குதல் – 03 பேர் பலி!

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தியதாகக் கூறப்படும் படகு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 03 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

லத்தீன் அமெரிக்கக் கடல் பகுதிகளிலும் கிழக்கு பசிபிக் பெருங்கடலிலும் போதைப்பொருள் கடத்துவதாகக் கூறப்படும் கப்பல்களைக் குறிவைத்து டிரம்ப் நிர்வாகம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்படி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கடற்படையினரின் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளின் காரணமாக இதுவரை   குறைந்தது 181 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘போதைப்பொருள் பயங்கரவாதத்தை’ எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் இவை அவசியம் என்று ட்ரம்ப் நிர்வாகம் கூறிவருகிறது.

அதிகப்படியான போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் மரணங்களுக்கு முக்கியக் காரணமாக விளங்கும் ஃபென்டானில், முதன்மையாக மெக்சிகோவிலிருந்து தரைவழியாகக் கடத்தப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி, தாக்குதல் நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்படுகின்றன.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!