அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு டெல்லி வலியுறுத்து!

மாகாண சபைத் தேர்தலை மேலும் காலம் தாழ்த்தாமல் நடத்தும்படி இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவைத் தாம் நேரில் சந்தித்துப் பேசிய போது கேட்டுக்கொண்டார் என இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏழு பேரை நேற்றுப் பிற்பகல் கொழும்பில் சந்தித்த சமயமே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றே நியாயமானதாகவும், நின்று, நிலைத்து, நீடிக்க கூடியதாகவும் இருக்கும் என்பதை தமிழர் தரப்பு பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத் தமிழ் அகதிகள் நாடு திரும்ப விரும்பினால் அதற்கு ஏற்ப பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தமிழ்த் தலைவர்களோடு இந்தியத் துணை ஜனாதிபதி விரிவாக ஆராய்ந்தார்.

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் – குறிப்பாக தமிழர் தாயகப் பிரதேசத்தில் – மேற்கொள்ளப்படும் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் அவர் ஆராய்ந்தார்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் நடைமுறையாக்கம் பற்றிய விவகாரங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்தாய்வு செய்தனர்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் வசனம் தெரிவித்தனர்.

அது குறித்து முற்பகலில் இலங்கை ஜனாதிபதியோடு தான் நடத்திய பேச்சின் போது தான் நேரடியாக வலியுறுத்தினார் என்று இந்தியத் துணை ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனினும், இந்தியத் துணை ஜனாதிபதியின் இந்த வலியுறுத்தலுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ எந்தப் பிரதிபலிப்பையும் இலங்கை ஜனாதிபதியோ அல்லது இலங்கைத் தரப்புப் பிரதிநிதிகளோ அந்தச் சந்திப்பில் வெளிப்படுத்தவில்லை என்றும் அறியவந்தது.

சந்திப்பில் பங்கேற்ற தமிழ் அரசியல் பிரமுகர்கள் விபரம்

சி.வி.கே.சிவஞானம்.

சிவஞானம் சிறீதரன்.

எம்.ஏ.சுமந்திரன்.

இரா.சாணக்கியன்.

தர்மலிங்கம் சித்தார்த்தன்.

செல்வம் அடைக்கலநாதன்.

செல்வராசா கஜேந்திரன்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!