இலங்கை செய்தி

இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்த தமிழ்க் கட்சிகள்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் மலையக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று (19) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள்  பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை மலையக தமிழ்க் கட்சிகளின் சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் டிட்வா புயலுக்கு பிந்தைய மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இந்திய அரசாங்கம் வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிப் பொதிக்கும், காலப்போக்கில் வழங்கப்பட்ட ஏனைய நிவாரண நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்குத் தமிழ்க் கட்சிகளின் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளன.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!