விளையாட்டு

IPL -2026: இன்று இரு ஆட்டங்கள்!

IPL தொடரில் இன்று நடைபெறும் 27 ஆவது லீக் ஆட்டத்தில் Chennai Super Kings CSK, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Chennai Super Kings ஆகிய அணிகள் இன்று (18) மோதுகின்றன.

இப்போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்த நிலையில் அந்த அணி கடைசியாக தனது சொந்த மைதானத்தில் கம்பீரமாக மீண்டு வந்தது.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்விகளை சந்தித்த போதிலும் அதில் இருந்து மீண்டு வந்து அடுத்தடுத்து 2 வெற்றிகளை பெற்றுள்ளது.

தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது.

டெல்லி அணிக்கு எதிராக சதம் விளாசிய சஞ்சு சாம்சன், கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 48 ஓட்டங்கள்கள் எடுத்திருந்தார்.

அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

ஆர்.சி.பி. அணியின் ஆட்டம்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பிற்பகல் 3.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் இப்போட்டி நடைபெறும்.

நடப்பு சாம்பியனான ஆர்சிபி மிகவும் வலிமையான அணியாக உருவெடுத்துள்ளது.

5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகளை குவித்து பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது.

முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற அந்த அணி அடுத்தடுத்த 2 ஆட்டங்களில் தோல்விகளை சந்தித்துள்ளது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!