உலகம் செய்தி

இஸ்ரேல் உளவாளிகள் நால்வரை கைது செய்தது ஈரான்!

ஈரான் கிலான் மாகாணத்தில், இஸ்ரேல் உளவு பிரிவான மொசாட்டுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை புரட்சிகர காவல் படை கைது செய்துள்ளது.

ஈரானின் முக்கியமான ராணுவ மற்றும் பாதுகாப்பு இடங்களை ரகசியமாகப் புகைப்படம் எடுத்து இணையம் வழியாக கைதான சந்தேகநபர்கள், இஸ்ரேல் அதிகாரிகளுக்கு பகிர்ந்துள்ளனர்.

எனினும், ஈரான் உளவுத்துறையினரின் தீவிர கண்காணிப்பின் மூலம் இந்த உளவு நடவடிக்கை முறியடிக்கப்பட்டதாக ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

போர்ச் சூழலுக்கு மத்தியில் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்டனர் என இவர்கள்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் நபர்களுக்கு எதிராக ஈரான் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!