ஹோர்முஸ் ஜலசந்தியில் மற்றுமொரு கப்பலை முற்றுகையிட்ட அமெரிக்கா!
ஹோர்முஸ் ஜலசந்தியை விட்டு வெளியேற முயன்ற மற்றொரு கப்பலை அமெரிக்க கடற்படையினர் வெற்றிகரமாக திருப்பி அனுப்பியுள்ளனர்.
திருப்பி அனுப்பப்பட்ட கப்பல், ஈரான் கொடி ஏற்றப்பட்ட ஒரு சரக்குக் கப்பல் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கையை யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் (DDG-111) என்ற போர்க்கப்பல் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கப்பலுடன் அமெரிக்கா இதுவரை 10 கப்பல்களை வெற்றிகரமாக திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கடற்படை முற்றுகையை விதித்து மூன்றே நாட்களில் சுமார் 20 சதவீத வர்த்தகத்தை கட்டுப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் ஈரான் மீது அழுத்தம் கொடுக்க ட்ரம்ப் முனைந்துள்ளார். இந்த நடவடிக்கைக்காக 10,000இற்கும் மேற்பட்ட துருப்புகள், 12இற்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் ஏராளமான விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் கூறுகிறது.





