உலகம்

உக்ரைன் மீது குண்டு மழைப் பொழிந்த ரஷ்யா!

உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது ரஷ்யப் படைகள் நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 12 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“மருத்துவர்களின் கூற்றுப்படி, தலைநகரில் 12 வயது சிறுவன் மற்றும் 35 வயது பெண் என இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கீவ் நகருக்கான வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது என்றும், குடியிருப்பாளர்கள் தங்கள் தங்குமிடங்களிலேயே தங்கியிருக்குமாறும் கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ (Vitaliy Klitschko) வலியுறுத்தியுள்ளார்.

கீவ் மீதான ரஷ்ய வான்வழித் தாக்குதல்கள்  அதிகாலையில் தொடங்கி , பொடில்ஸ்கி (Podilskyi), ஒபோலோன்ஸ்கி (Obolonskyi) மற்றும் டெஸ்னியான்ஸ்கி (Desnyanskyi) ஆகிய மாவட்டங்கள் முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!