நீடித்த அமைதிக்கான அஸ்திவாரம் – 34 ஆண்டுகளின் பின் ஒன்றுக்கூடும் தலைவர்கள்!
இஸ்ரேல் மற்றும் லெபனான் தலைவர்கள் 34 ஆண்டுகளுக்கு பின் நாளைய தினம் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
லெபனான் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்காவிற்கான இஸ்ரேல் மற்றும் லெபனானின் தூதர்கள் வொஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட முயற்சிக்கிறோம்.
“இரு தலைவர்களும் பேசி நீண்ட காலமாகிவிட்டது, கிட்டத்தட்ட 34 ஆண்டுகள். அது நாளை நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையில் யார் யார் கலந்துகொள்வார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை.





