இலங்கை செய்தி

புத்தாண்டு காலத்தில் அதிவேக வீதிகள் மூலம் 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

புத்தாண்டை முன்னிட்டு கடந்த 03 நாட்களில் அதிவேக வீதிகள் மூலம் 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் மாத்திரம் அதிவேக வீதிகளில் 4 லட்சத்து 34 ஆயிரத்து 338 வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அநுராத ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடந்த 12 ஆம் திகதி மாத்திரம் 45 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளது.

இதேவேளை, அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் ஏதேனும் விபத்து அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு உள்ளானால், 1969 என்ற உடனடி அழைப்பு மையத்திற்குத் தெரிவிக்குமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!