விளையாட்டு

Rajasthan Royals அணியை பந்தாடியது Sunrisers Hyderabad

IPL 2026 தொடரில் நேற்று நடைபெற்ற 21 ஆவது லீக் ஆட்டத்தில் Sunrisers Hyderabad
அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றிபெற்ற Rajasthan Royals
அணியின் வெற்றிநடைக்கு இதன்மூலம் தற்காலிகமாக முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.

ஐதராபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Rajasthan Royals அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய Sunrisers Hyderabad அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ஓட்டங்களைப் பெற்றது.

ஐதராபாத் அணியின் சார்பில் கேப்டன் இஷான் கிஷன் 44 பந்துகளில் 91 ஓட்டங்களை விளாசினார்.

217 என்ற வெற்றி இலக்கை துரத்திய Rajasthan Royals அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் ஒரு ஓட்டத்துடனும், வைபவ் சூர்யவன்ஷி ஓட்டம் எதுவும் பெறாமலேயே ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை Rajasthan Royals பெற்றது. இதன் அடிப்படையில் அவ்வணி தோல்வி அடைந்தது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!