பிலிப்பைன்ஸ் பறந்தார் பிரதமர் ஹரிணி! விசேட உரைக்கு ஏற்பாடு!!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Prime Minister Dr. Harini Amarasooriya பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நோக்கி நேற்றிரவு பயணமானார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ADB அழைப்பின் பேரில் இவ்விஜயம் இடம்பெறுகின்றது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்வில பிரதமர் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.
அத்துடன் பிலிப்பைன்ஸ் அரசாங்க அமைச்சர்களுடனும் அவர் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.





