ஆஸ்திரேலியா உலகம்

மத்திய கிழக்கு போர்: முக்கிய இரு பிரதமர்கள் விடுத்துள்ள கூட்டு அறிவிப்பு!

ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தல் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று கனடா Canada மற்றும் ஆஸ்திரேலியா Australia ஆகிய நாடுகளின் பிரதமர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய கிழக்கில் போர் நீடிக்கப்படுவதை தாம் விரும்பவில்லை எனக் கூறிய அவர்கள், போர் நிறுத்தத்தை பகிரங்கமாக வலியுறுத்தவில்லை.

கனடா பிரதமர் மார்க் கார்னி Mark Carney ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று கனடா பிரதமர் உரையாற்றினார்.

அதன்பின்னர் இரு நாட்டு தலைவர்களும் பேச்சு நடத்தினர். பின்னர் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர்.

ஈரான் மீதான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், தற்போதைய நிலையில் போர்நிறுத்தம் செய்வது சாத்தியமற்றது என்றும், ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தல் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்றும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

ஊலகளாவிய மோதல்கள் அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியாவும் கனடாவும் மற்ற நடுத்தர நாடுகளுடன் இணைந்து புதிய சர்வதேச விதிகளை உருவாக்க வேண்டியது அவசியம் என்று கார்னி தனது உரையில் வலியுறுத்தினார்.

அதேவேளை, பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கு கனடா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

மேலும் முக்கியமான தாதுக்கள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இணக்கம் எட்டப்பட்டது.

 

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!